/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a (59)_0.jpg)
இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகளைமட்டுமின்றி பொருளாதார இழப்புகளையும்இந்தக் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியது. இதற்கிடையே கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (28.06.2021) மாலை 3 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பொருளாதார நிவாரணத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் நிலை நகரங்களில்சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)