Advertisment

‘பாஜக எங்களுடைய எம்.எல்.ஏக்களை கடத்திவிட்டது’- டி.கே. சிவக்குமார் 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

Advertisment

dk

இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த் நீதிபதி, சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.

Advertisment

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு தன்னுடைய பலத்தை காட்ட இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக கூறி இருந்தது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதற்காக எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி என்று பல எம்.எல்.ஏ க்கள் வருகை தந்துள்ளனர். அதிருப்தியில் இருக்கும் காங். எம்.எல்.ஏ க்கள் இன்று நடைபெறும் நம்பிக்கை தீர்மானத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் சட்டசபையில் பேசிய காங். கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா, “ உச்சநீதிமன்றத்தின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் குறித்த உத்தரவில் தெளிவு கிடைக்கும் வரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கலாமா, கூடாதா என்று உச்சநீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற வேண்டும். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனையடுத்து பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். மூன்று மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போது பேசிய டி.கே. சிவக்குமார், “நேற்றுவரை எங்களுடன் இருந்த சீமந்த பாட்டீல், இன்று மும்பையில் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்துவிட்டார். பாஜக எங்களுடைய எம்எல்ஏ க்களை கடத்துகிறது என்று பேசினார். இதனையடுத்து காங். எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe