floor test in kerala

கேரளா சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நிரூபித்துள்ளது.

Advertisment

கரோனா தொற்றால் கேரள சட்டப்பேரவை தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சட்டமன்றம்கூடியது. இதில் கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன், மாநில அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தார். ஐடி துறைக்கு பொறுப்பாக இருக்கும் முதலமைச்சர், முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷின் பணி குறித்து தனக்கு தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை என்று அவர் தெரிவித்தார். இதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாகக் காரசார விவாதம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் ஆளும்கட்சிக்கு போதுமான ஆதரவு கிடைத்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

Advertisment