Advertisment

வெள்ளப்பெருகில் சிக்கி 150 பேர் உயிரிழப்பு?-உத்தராகண்ட்டில் பதற்றம்!!

floods? Tension in Uttarakhand

உத்தராகண்ட்சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இன்றைய தினம் காலை ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு காரணமாக தெலலிங்காஆற்றில் கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகதலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

Advertisment

வெள்ளப்பெருக்குகாரணமாக கரையோரம் இருக்கக்கூடிய பொதுமக்களின் வீடுகள் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. அந்த பகுதியில் இருக்கக்கூடிய ரிசி கங்காமற்றும்தபோவன் நீர்மின் நிலையமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்பு படை குழு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

flood India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe