ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனே அவர் தங்கியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆந்திர மாநில அரசு சார்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

flood warning to chandrababu naidu home

கிருஷ்ணா நதிக்கரையில் அருகில் உள்ள தனது வீட்டில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வருகிறார். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆற்றின் ஓரத்தில் வசிக்கும் சந்திரபாபு நாயுடு உட்பட38 பேருக்கு, உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோட்டீஸ் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே சந்திரபாபு நாயுடு வீட்டின் மேலே ட்ரோன் விமானம் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தான் முழுக்க முழுக்க காரணம் என தெலுங்குதேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் தற்போது வீட்டை விட்டு வெளியேற வந்திருக்கும் உத்தரவும், பழிவாங்கும் நடவடிக்கையே என சந்திரபாபு நாய்டுவின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.