வெள்ள பாதிப்பு; ஆளுநரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

Flood damage Prime Minister Modi asked the Governor

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

டெல்லியில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாளில் 153 மி.மீ மழை பதிவானது. அதன் பிறகு கடந்த 9 ஆம் தேதி ஒரே நாளில் 153 மி.மீ மழை பெய்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கனமழை காரணமாக டெல்லியின் முக்கியச் சாலைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் மழைநீர் ஆறு போல் காட்சியளிக்கிறது. மேலும் டெல்லியில் உள்ள அதன்குட் அணை நிரம்பியதால் யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை மற்றும் ஆய்வுகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியநாடுகளுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம்மேற்கொண்டிருந்தார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இதையடுத்து டெல்லியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி டெல்லி துணைநிலை ஆளுநர் வினாய் குமார் சக்சேனாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

Delhi governor rain
இதையும் படியுங்கள்
Subscribe