ஃப்லிப்கார்ட் நிறுவனதில் கடந்த 18 மாதங்களாக மனிதவள (HR)தலைமைபொறுப்பு காலியாக இருந்தது. இந்த நிலையில் ஸ்ம்ரிதி கிருஷ்ணாசிங் (Smriti Krishna Singh)அந்தப் பொறுப்புக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஃப்லிப்கார்ட்டில் மனிதவள துறையை அதன் தலைமை செயல் அதிகாரி கல்யான் கிருஷ்ணமூர்த்தி கவனித்துவந்தார். இனி ஸ்ம்ரிதி கிருஷ்ணாசிங் அதன் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ம்ரிதி கிருஷ்ணாசிங்இதற்கு முன் சோனி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஃப்லிப்கார்ட்டில் வரும் டிசம்பர் 3-ம் தேதி முதல் பொறுப்பேற்பார்என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.