Skip to main content

உபியில் கரும்புத் தோட்டத்தில் விழுந்த விமானம்....

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
iaf

உத்திரப் பிரதேசம் மாநிலம் பாக்பத்தில் இந்திய விமானப்படையின் சிறிய ரக விமானத்தில் இரு விமானிகள் பயணம் மேற்கொண்டனர். வானில் பறந்து கொண்டிருக்கும்போதே விமானத்தின் இஞ்சீனீல் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த அந்த விமானிகள். உடனடியாக பாராசூட்டை அணிந்துகொண்டு விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். சிறிது நேரம் விண்ணில் பறந்த விமானம் இறுதியில் அங்கிருந்த கரும்பு தோட்டத்தில் விழுந்து உடைந்தது. அந்த இரு விமானிகளுக்கும் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் அருகே 10 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
10 acres of sugarcane burned and damaged near Srimushnam

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தில்10 ஏக்கர் கரும்பு எரிந்து  சாம்பலானது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்குபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார், ராஜேசேகர் ஆகியோருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த கரும்பு வயலுக்கு அருகில் இருந்த நெல் வயலில் நெல் அறுவடை முடிந்து வைக்கோலை எரியூட்டியுள்ளனர். அப்போது பலமான காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக தீ கரும்பு வயலில் பரவியது. இதில் 10 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த கரும்பு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலான கரும்பின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பன்னீர் கரும்பு விளைச்சல் அமோகம்; அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Farmers are happy as govt has announced that it will purchase sugarcane at Rs.33

தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் தமிழர்களின் விழாவாகப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனைத் தைத்திருநாள் என்று அழைக்கிறார்கள். இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1 ஆம் தேதியில் சூரிய வழிபாடும், விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளாக வருகிற 15 ஆம் தேதி கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் பன்னீர் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, பொங்கல் பானை, அறுவடையில் கிடைத்த புது பச்சரிசி  உள்ளிட்டவை  முக்கிய இடம் பெறுகிறது

இத்தகைய திருநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய பன்னீர் கரும்பு சிதம்பரம் பகுதியில் கடவாச்சேரி, பழைய நல்லூர், சாலியந்தோப்பு, பிள்ளைமுத்தாசாவடி, அகரநல்லூர், வேளக்குடி, சேத்தியாதோப்பு, வாழக்கொல்லை, வீராணம் ஏரியின் படுகை, நடுவீரப்பட்டு, பாலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசே பொங்கலுக்கு பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் கரும்பு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுடன் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, முழு பன்னீர் கரும்பு, ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் 5 அடி உயரமுள்ள முழு கரும்பை ரூ.33க்கு அரசே கொள்முதல் செய்யும் என அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பழைய நல்லூர் பகுதியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயி கூறுகையில், போதிய மழை பெய்ததாலும் இயற்கை இடர்பாடுகள் எதுவும் இல்லாததாலும் கரும்பு நன்றாக விளைந்துள்ளது. ஒரு கரும்பு 6 அடி முதல் 7 அடி வரை வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.