மும்பையில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மும்பை காட்கோபர் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் இன்று மதிய வேளையில் ஒரு பயங்கரசத்தம் கேட்டது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் பார்த்தபோது ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை அடுத்துதீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
உடனே விரைந்த தீயணைப்பு துறை தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இதுவரை ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.