Advertisment

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று (02/05/2021) எண்ணப்பட்டு, இன்றே முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Advertisment

குறிப்பாக, தமிழகத்தில் இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காலை 08.30 மணியளவில் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மாநிலகாவல்துறையினர், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக,காங்கிரஸ், மதிமுக, விசிக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் என இருவர் உயிரிழந்தனர்.

Advertisment

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள்?

1. கேரளா - 140 சட்டமன்றத் தொகுதிகள்.

2. புதுச்சேரி - 30 சட்டமன்றத் தொகுதிகள்.

3. மேற்கு வங்கம் - 294 சட்டமன்றத் தொகுதிகள் (இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்ததால் அங்கு வாக்குப்பதிவு நடக்கவில்லை. 292 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.)

4. தமிழகம் - 234 சட்டமன்றத் தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

5. அசாம் - 126 சட்டமன்றத் தொகுதிகள்.

Assam west bengal Kerala Tamilnadu VOTE COUNTING Assembly election
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe