Advertisment

இன்று தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

FIVE STATES ASEMBLY ELECTION DATES ANNOUNCED FOR TODAY

Advertisment

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், டெல்லியில் இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். அப்போது, தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க உள்ளனர். மேலும், தேர்தல் தேதி தொடர்பான முழு தேர்தல் அட்டவணையைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிடுகிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். ஏற்கனவே தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்குத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, முதற்கட்டமாக துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட, மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் அட்டவணையை இறுதிசெய்ய, காணொளி மூலம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் குழு ஆலோசனை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Assembly election election commision of india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe