ADVERTISEMENT

ஐந்து மாநில தேர்தல்: எந்தெந்த மாநிலங்களில் யார் யார் முன்னிலை?

10:51 AM May 02, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அசாமில் பாஜக கூட்டணி 77 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 36 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. கேரளாவில் 92 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 170 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT