Advertisment

பிரான்ஸிலிருந்து இந்தியா புறப்பட்டது ரஃபேல் விமானங்கள்...

five rafale jet departed from france to india

பிரான்ஸ் நாட்டிலிருந்து முதற்கட்டமாக ஐந்து ரஃபேல் விமானங்கள் இந்தியா புறப்பட்டுள்ளன.

Advertisment

பிரான்சிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்கக் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, அண்மையில் இறுதிசெய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, மே மாதம் இந்தியாவிற்கு ஐந்து ரஃபேல் விமானங்களை வழங்க பிரான்ஸ் உறுதி அளித்திருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால், இப்போதுதான் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று காலை பிரான்ஸிலிருந்து புறப்பட்டுள்ள இந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு, வரும் ஜூலை 29 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

france rafael
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe