Five month old baby passes away in karnataka

Advertisment

கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிட்டப்பா. இவருக்கும், ஸ்ரீதேவி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், சிட்டப்பாவை பிரிந்து ஸ்ரீதேவி வாழ்ந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக சிட்டப்பா இரண்டாவதாக தேவம்பாள் என்பவரைத்திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் பிறந்து, அவர்களுடன் வாழ்ந்து வந்தனர். அந்த சமயம், ஸ்ரீதேவி மீண்டும் சிட்டப்பாவுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை நடத்த வந்துள்ளார். சிட்டப்பாவும், தனது இரு மனைவிகளுடன் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

சிட்டப்பாவுக்கு தனது முதல் மனைவி மூலம் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிட்டப்பாவும், அவரது முதல் மனைவியும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில், கடந்த ஆக.30ம் தேதி குழந்தையின் வாயில் நுரை தள்ளி இறந்தது. இதனால், சந்தேகம் அடைந்த குழந்தையின் தாய் ஸ்ரீதேவி, போலீஸில் புகார் அளித்தார்.

Advertisment

அதன்படி வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தியதில்,குழந்தைக்குக் கொடுக்கப்பட்ட பாலில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் தங்களது விசாரணையைத்தீவிரப்படுத்தினர். இதில், சிட்டப்பாவின் இரண்டாம் மனைவியான தேவம்பாள் தான் குழந்தைக்கு விஷம் கலந்த பால் கொடுத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தேவம்பாளை போலீஸார் கைது செய்தனர்.