Five lakh crore loan to the central government

Advertisment

கரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக நடப்பு நிதியாண்டில் 12.05 லட்சம் கோடி ரூபாய்கடன் வாங்க வேண்டியிருக்கும் என 2021 - 2022 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. இதில் ரூ. 7.02 லட்சம் கோடி (60 சதவீதம்) நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் திட்டமிடப்பட்டது. இவை பத்திரங்கள் வெளியீடு மூலம் முதல் அரையாண்டுக்கான நிதி பெறப்பட்டது. எனினும் நிகர கடன் 9.37 லட்சம் கோடியாக இருந்தது.

எனவே 2வது பாதியில் மீதமுள்ள ரூ. 5.03 லட்சம் கோடி கடன் வாங்க இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 12.05 லட்சம் கோடி ரூபாயை சந்தையில் இருந்து திரட்டப்படும் மொத்த கடனாக வாங்க இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. அந்த தொகையில் 60 சதவீதமான 7.24 லட்சம் கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே வாங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 7.02 லட்சம் கடன் மட்டுமே முதல் அரையாண்டில் வாங்கப்பட்டிருந்தது என நிதி அமைச்சகம் தெரிவிக்கிறது. 2021 - 22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசின் மொத்த கடன் 12.05 லட்சம் கோடி ரூபாயாகவும் நிகர கடன் 9.37 லட்சம் கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.