Advertisment

மாநிலங்களவையில் 'மீனவர் பிரச்சனை' - இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

parliament

Advertisment

கடந்த மாதம்29-ஆம் தேதிநாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,பிப்ரவரி1 ஆம் தேதி பட்ஜெட்தாக்கல்செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (03.02.2021) மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள்இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் கேள்வியெழுப்பினர். தமிழக மீனவர்கள் நான்கு பேரைக் கொன்றுவிட்டதாக தெரிவித்ததிமுக எம்.பிதிருச்சிசிவா, அடிக்கடி பாதிக்கப்படுவதால் மீன்பிடி தொழிலை விட்டுவிடதமிழக மீனவர்கள் யோசிக்கிறார்கள் என்றார். அதேபோல் கடற்படையின் தாக்குதலுக்கு அதிமுகஎம்.பி. தம்பிதுரையும்கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக நடடிக்கை எடுத்து தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும் எனவும் தம்பிதுரைவலியுறுத்தினார்.

parliament

Advertisment

அதனையடுத்து, இச்செயலில் ஈடுப்பட்ட இலங்கை அரசுக்குகண்டனம் தெரிவித்ததாகமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

நேற்று தொடங்கியதமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநர் உரையில் இலங்கை கடற்படையின் செயலால்தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

fisherman admk parliment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe