Skip to main content

ஒரு மீன் விலை 5.5 லட்சம்! அதிர்ஷ்டத்தை பிடித்த சகோதரர்கள்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
fish

 

 

 

மும்பையை சேர்ந்த மகேஷ் மெகர், பரத் என்ற சகோதரர்கள் தங்களது சிறிய படகான ''சாய்லட்சுமியை'' எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

 

எப்போதும் போல மீன்பிடித்துவிட்டு திரும்பும்வழியில் பால்கர் என்ற பகுதியில் மீண்டும் வலையை விரித்துள்ளனர். அப்போது வலையில் ''கோல்'' என்ற சுமார் 30 கிலோ எடைகொண்ட  அரியவகை மீன் சிக்கியது. கோல் ருசி மிகுந்த மீன் மற்றும் எளிதில் யாருக்கும் சிக்காத மீனாகும்.

 

இது மருத்துவக்குணங்களை கொண்ட மீன். அதிகம் சிங்கப்பூர், மலேஷியா, பெய்ஜிங் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலையுர்ந்த மீன் என்பதால் அதற்கு மவுசு அதிகம். மகேஷ்-பரத் சகோதரர்களுக்கு சிக்கிய அந்த கோல் மீன் சந்தைக்கு வந்த சிலமணி நேரத்திலேயே 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விலைபோயுள்ளது. இதனால் அவர்கள் ஒரே நாளில் லட்சாதிபதியாகினர். மேலும் இந்த தொகையை கொண்டு படகு மற்றும் வலையை புதுப்பிக்கப்போவதாக அந்த சகோதரர்கள் கூறியுள்ளனர்.   

சார்ந்த செய்திகள்