Advertisment

வரலாற்றில் முதல்முறை..செங்கோட்டையில் நாளை பூமழை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

pm modi

Advertisment

இந்தியாவின் 75வது சுதந்திர தினம்,நாளை கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்திய பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி உரையாற்றுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பிரதமர் மோடி, செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றவுள்ளார்.

இந்தநிலையில்நாளை வரலாற்றில் முதல்முறையாக, பிரதமர் மோடி கொடியேற்றியதும் செங்கோட்டையில் பூ மழை பொழிய இருக்கிறது. இதனை பாதுகாப்புத்துறைஅமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாகபாதுகாப்புத்துறைஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதல்முறையாக இந்த வருடம் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடியை ஏற்றியவுடன், விழா நடைபெறும் இடத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமானMi-17 1Vஹெலிகாப்டர்களால்மலர் தூவப்படும்" என கூறப்பட்டுள்ளது.

75th Independence Day Narendra Modi red fort
இதையும் படியுங்கள்
Subscribe