"பிரதமரானால் இதைத்தான் முதலில் செய்வேன்" - கன்னியாகுமரி மாணவர்களுக்குப் பதிலளித்த ராகுல் காந்தி!

rahul gandhi

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தீபாவளியை ஒட்டி நேற்று இரவு விருந்தளித்தார். அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல் வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் காந்தியிடம், நீங்கள் பிரதமர் ஆனால் என்ன உத்தரவை முதலில் பிறப்பிப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு ராகுல் காந்தி, பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பேன் எனப் பதிலளித்துள்ளார். அதேபோல் உங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக்கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, பணிவைக் கற்றுக்கொடுப்பேன். அதன்மூலம் புரிதல் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்த இரவு விருந்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத் தொடக்கத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்த ராகுல் காந்தி, இந்த மாணவர்கள் பயிலும் தனியார்பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதோடு, உடற்பயிற்சி செய்து காட்டியதும் நினைவுகூரத்தக்கது.

Rahul gandhi Women
இதையும் படியுங்கள்
Subscribe