Skip to main content

முதல் மக்களவை முதல் 16-வது மக்களவை வரை பெண்களின் பங்களிப்பு !

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

இந்தியாவில் வாழும் பெண்கள் அனைவருக்கும் கல்வி , வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் 33% இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வர வேண்டும் என பல்வேறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உதாரணமாக 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் சுமார் 179 பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ஒவ்வொரு மக்களவையிலும் அங்கம் வகித்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம்.

 

woman 1



1. முதல் மக்களவை "First Lok sabha" (1952) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 24 பேர் மட்டுமே ஆகும்.

2.இரண்டாம் மக்களவை "2nd Lok sabha" (1957) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 24 பேர் மட்டுமே ஆகும்.

3. மூன்றாவது மக்களவை "3rd Lok sabha"  (1962-1967) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 37 பேர் மட்டுமே ஆகும்.

4. நான்காவது மக்களவையில் "4th lok sabha" 33 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.

5. ஐந்தாவது மக்களவையில் "5th Lok Sabha" 28 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.

6. ஆறாவது மக்களவையில் "6th Lok sabha" 21 பெண் உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

7. ஏழாவது மக்களவையில் "7th lok sabha" (1980-1984)  32 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

8. எட்டாவது மக்களவையில் "8th Lok Sabha"  (1984-1989) 45 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

9. ஒன்பதாவது மக்களவையில் " 9th lok sabha" (1989) 28 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

10.  10-வது மக்களவையில் "10th Lok Sabha" (1991-1996) 42 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

11. 11 - வது மக்களவையில் "11th Lok Sabha"  41 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

12. 12- வது மக்களவையில் "12th Lok Sabha" 44 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

13. 13-வது மக்களவையில் "13th Lok sabha" 52 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

14. 14-வது மக்களவையில் "14th Lok Sabha" 52 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

15. 15-வது மக்களவையில் " 15th Lok Sabha" (2009-2014) 64 உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

16. 16-வது மக்களவையில் "16th Lok Sabha" (2014-2019) 66 உறுப்பினர்கள் அதிகப்பட்சமாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

woman



இந்திய வரலாற்றில் முதன் முறையாக 15-வது மக்களவையில் மக்களவை சபாநாயகராக திருமதி . மீரா குமார் பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக 16-வது மக்களவையில் மக்களவை சபாநாயகராக திருமதி . சுமித்ரா மகாஜன் பதவியேற்றார்.எனினும் மாநிலங்களவையில் பெண் உறுப்பினர் சபாநாயகர் பதவியில் அமர்ந்தது இல்லை. 

 

woman



காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மக்களவை தேர்தலிலும் தங்களது தேர்தல் அறிக்கையில் ( 2009, 2014) மத்தியில் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியளித்தது. 2009 -ல் மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தவறிவிட்டது. இருப்பினும் 2019- மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தால் மீண்டும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளது. 

2014- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கட்சி தங்கள் மத்தியில் ஆட்சி அமைந்தால் கட்டாயம் பெண் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவித்த நிலையில் , இந்த மசோதாவை நிறைவேற்ற தவறிவிட்டது தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு. மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சிகள் 1999, 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயம் பெண் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் வாக்குறுதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில் இந்திய ஒர் ஜனநாயக நாடு என்பதை உறுதிப்படுத்தவும் , அதற்கு மேலும் வலுவூட்டவும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா வரும் காலங்களில் மிக அவசியமானது என்றால் எவராலும் மறுக்க முடியாது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.