Skip to main content

திருமணம் ஆகி முதல் நாளே என்னை.... கணவன் மீது பரபரப்பு புகார் அளித்த மனைவி

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
wife who complained about her husband


ஆந்திர மாநிலம் கர்னூர்  பகதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத். இவருக்கு கடந்த ஆண்டு திரிவேணி என்பவருடன் ஆகஸ்ட் 2ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் திரிவேணி, தனது பெற்றோருடன் ராயதுர்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். 
 

 

 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிவேணி, திருமணத்தின்போது 45 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகள், திருமண செலவிற்காக 10 லட்சம் என் வீட்டில் இருந்து கொடுத்தார்கள். 
 

திருமணம் ஆன முதல் நாளிலேயே என்னை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். என்னை கட்டாயப்படுத்தி துன்புறுத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். தினமும் என்னை கொடுமைப்படுத்தினார். திருமணம் ஆகி அடுத்தவர்கள் வீட்டுக்கு சென்றிருந்ததால் பயத்தில் இதனை அவர்களது வீட்டிலும் நான் தெரிவிக்கவில்லை. எங்களது பெற்றோர் கவலைப்படுவார்கள் என்று அவர்களிடம் தெரிவிக்கவில்லை. 
 

 

 

தினம் தினம் கொடுமைப்படுத்தினார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத நான், மாமனார் மாமியார் ஆகியோரிடம் தெரிவித்தேன். அவர்கள், அவன் அப்படித்தான் இருப்பான். அவன் சொன்னபடி கேட்க வேண்டும் என்றனர். திடீரென்று ஒரு நாள் என்னிடம், நீ காசநோயாளி என்பதால் உன்னை விவாகரத்து செய்ய வேண்டும். அதற்கு சம்மதித்து கையெழுத்து போடும்படி மிரட்டினார்கள்.
 

இதற்கு பிறகுதான் என்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு, இங்கு நடக்கும் கொடுமைகளை சொன்னேன். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப்போடவில்லை என்றால், நிர்வாணப் படங்களை, வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்கள். 
 

 

 

நான் காசநோயாளி இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனையில் பரிசோத்து அந்த மருத்துவமனையின் அறிக்கையையும் காண்பித்தேன். இருப்பினும் எனது கணவன் கொடுமைப்படுத்தினார். திருமணத்திற்கே தகுதியற்றவன் என கூறிய என் கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறார்.
 

ஆகவே திருமணத்தின்போது நாங்கள் வழங்கிய 55 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை, எனது படிப்பு சான்றிதழ்களை பெற்றுத் தரும்படி போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.