Firing in Delhi Court!!

டெல்லியில் இன்றுசாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் உடையில் வந்த ஒருவர் எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். நீதிமன்ற வளாகத்தில் 4 முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Advertisment

படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்ம நபரால் அப்பெண் சுடப்பட்டபோது அவர் தனது வழக்கறிஞருடன் இருந்துள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் குற்றப் பின்னணிகொண்டவர் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக 24 செப்டம்பர் 2022 அன்று, டெல்லியின் ரோகினி நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் உடையணிந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். ராகுல் தியாகி மற்றும் ஜக்தீப் ஜக்கா எனும் பெயர் கொண்ட அவர்கள் இருவரும் நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்காக வழக்கறிஞர்கள் போல் காட்டிக்கொண்டு, கேங்ஸ்டர் கோகி என்கிற ஜிதேந்தர் மான் மீது தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டினை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.