Advertisment

பட்டாசு வெடித்து சிதறி விபத்து; 150 பேர் காயம்

Fireworks explosion accident; 150 people were injured

திருவிழாவில் வானவேடிக்கையின் போது பட்டாசு வெடித்து சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரன் அஞ்சுதம்பலம் வீரராகவர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா நிகழ்ச்சியையொட்டி நள்ளிரவில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. திடீரென பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த விபத்து காரணமாக சிதறியடித்து ஓடினர். இந்த விபத்தில் சுமார் 150 பேர் காயமடைந்ததாகவும் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment
Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe