Fireworks ban ...? Green Tribunal Notice!

Advertisment

வருகின்ற 14 -ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் நவம்பர் 7 முதல் 30 -ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதை தடை செய்யலாமாஎனக் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேபோல் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பதில் அளிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் பட்டாசுக்குத் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.