திருப்பதியில் விரைவு ரயிலில் தீ விபத்து!

tpt-train-incident

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து நிசாமாபாத் ரயில் நிலையம் வரை ராயலசிமா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் திருப்பதி ரயில் நிலையத்தின் அருகே உள்ள லூப்லைனில் இன்று (14.07.2025) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த ரயிலை லூப்லைனில் இருந்து தண்டவாளத்திற்கு மாற்றி மீண்டும் பிளாட்பாரத்திற்கு கொண்டு வருவதற்கான பணியில் ரயிலின் லோக்கோ பைலட் ஈடுபட்டிருந்தார். 

அப்போது சிக்னலுக்காக காத்திருந்த இந்த ரயிலின் 2 பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த 2 பெட்டிகளை மட்டும் தனியாகக் கழற்றிவிட்டு மற்ற பெட்டிகளை அங்கிருந்து அகற்றினர். அதே சமயம் இது குறித்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மற்றொரு புறம் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதியில் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னை துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று திருவள்ளூர் அருகே நேற்று (13.07.2025) வந்தபோது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

fire incident Indian Railway Tirupati Train
இதையும் படியுங்கள்
Subscribe