அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கிசென்றுகொண்டிருந்த விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னையில் இருந்து அகமதாபாத் சென்றடைந்த 'நவஜீவன்' எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, நேற்று (17/11/2022) இரவு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் ஆந்திர மாநிலம்கூடூர் அருகே வந்தபோதுபேன்ட்ரீ பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, சமயோஜிதமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன், கூடூர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினர்.
இதையடுத்து, ரயில் பெட்டிக்கு தீ பரவாத படி நெருப்பு முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தால் கூடூர் ரயில் நிலையத்தில் ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.