Advertisment

ரசாயன ஆலையில் தீ விபத்து... 6 பேர் உயிரிழப்பு

 fire incident in Chemical plant

ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள அக்கிரட்டிகுடேம் என்ற பகுதியில் இயங்கிவந்த போரஸ் எனும் ரசாயன தொழிற்சாலையில் நான்காவது அலகில் நேற்று நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலைவரை கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கருகி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் ரியாக்டர் வெடித்தது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisment

rescued police incident Andrahpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe