Advertisment

உயிரைப் பறிக்க நினைத்த 'ஃபயர் ஹேர் கட்' - வெளியான அதிர்ச்சி வீடியோ

'Fire hair cut' that tried to take life - Shocking video released

Advertisment

ஃபயர் ஹேர் கட் முறை மூலம் சிகை அலங்காரம் செய்துகொள்ள முயன்ற நிலையில் இளைஞர் ஒருவர் தலையில் தீப்பிடித்து சலூன் கடையை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மைக்காலமாகவே 'ஃபயர் ஹேர் கட்' எனும் முறை பிரபலம் ஆகி வருகிறது. இளைஞர்கள் பலரும் இம்முறையின் மூலம் முடி திருத்தம் செய்வதோடு அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் வாபிநகரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சலூன் கடை ஒன்றில் ஃபயர் ஹேர் கட் செய்ய முயன்றுள்ளார். சலூன் கடைக்காரரும் அவர் தலையில் ரசாயன கலவையை தடவி நெருப்பை பற்ற வைத்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக தலையில் பயங்கரமாக தீப்பற்றியது. தொடர்ந்து அணைக்க முயன்றும் தீயானது அணையவில்லை. இதனால் அந்த இளைஞர் அலறி துடித்தார். தற்பொழுது அந்த இளைஞர் மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஃபயர் ஹேர் கட்டிங் முறைக்குஅந்த இளைஞர் தலையில் தடவப்பட்ட ரசாயனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/JQjj0sYe0io.jpg?itok=nNji9TDK","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Gujarath fire
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe