Advertisment

டெல்லியில் பயங்கர தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு!

fire in Delhi Public damage

Advertisment

டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பைக்கிடங்கில் நேற்று (21.04.2024) மாலை எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் தீயில் இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கிடங்கில் இருந்து விஷவாயு உற்பத்தியாகியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு தொண்டையில் எரிச்சல், புகையால் இருமல் வந்தது. இந்த தீயால் மாசு ஏற்பட்டது. இதனால் அனைவரும் அவதிப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து உள்ளூரில்ஒருவர் கூறும்போது, “இன்று கண்விழித்து பார்த்தபோது அந்த பகுதி தெளிவாக தெரியவில்லை. சரியாக மூச்சு விட முடியவில்லை. கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. வெப்பம் அதிகரிக்கும் போது தீ விபத்துகள் தொடரும். அரசு இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “டெல்லி மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் பணியாற்றி வருகின்றனர். தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா காஜிபூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe