Advertisment

 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

Fire at Delhi AIIMS Hospital

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisment

டெல்லியில்உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருக்கும் எண்டோஸ்கோபி அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட அறையிலிருந்த நோயாளிகளைப் பத்திரமாக வேறு அறைக்கு மாற்றிவருகின்றனர். மின்கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe