Advertisment

5 வருடங்களாக மூடப்பட்டிருந்த கிடங்கில் தீ

புதுச்சேரி கிராமப் பகுதியான கரசூரில் எல் & டி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டதால் அந்த இடத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் கிடங்காக உள்ளது.

Advertisment

இந்நிலையில் இன்று காலை கிடங்கில் ஜன்னல் வழியாக புகை கிளம்புவதை கண்ட காவலாளி உடனடியாக சேதராப்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து புகைந்து எரியத்தொடங்கியதால் அருகே உள்ள தன்வந்திரி நகர், வில்லியனூர், மற்றும் தமிழகப் பகுதியான வானூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வாகனங்களும் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர், மேலும் இந்தத்தீ விபத்துக்கானகாரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து சேதராப்பட்டு போலீசாருடன் இணைந்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

factory fire Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe