உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள நொய்டாவில் செக்டார் 24 பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பதற்றம்.
மருத்துவமனையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வண்டிகள் வர வைக்கப்பட்டு நீர் பாய்ச்சி தீயை அணைத்து வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனியிலுள்ள பொது மக்கள், நோயாளிகள் என்று அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.