Skip to main content

எய்ம்ஸ் மருத்துவமனை குடோனில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து

Published on 28/06/2021 | Edited on 28/06/2021
ர

 

டெல்லி எய்மஸ் மருத்துவமனையின் குடோன் ஒன்றில் இன்று (28.05.2021) காலை தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்தும், சேத விபரம் குறித்தும் கண்டறிய மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு!

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Pm modi opens AIIMS Hospital in Jammu

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம், மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (20-02-24) திறந்து வைக்கிறார். 

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்ததை தொடர்ந்து, மவுலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம், கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில், பிரதமர் வருகையையொட்டி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் வெளியீடு

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Release of tender for construction of Madurai AIIMS Hospital

 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது.

 

மதுரை மாவட்டம் தோப்பூரில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

 

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. மருத்துவமனையைக் கட்டுவதற்குத் தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகளை 33 மாதங்களில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது திமுக எம்.பி.க்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.