
கொல்கத்தா விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் அச்சத்துடன்வெளியேறினர்.
கொல்கத்தா விமான நிலையத்தின்செக்கிங்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுவிமானத்திற்காகக்காத்திருந்த பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புகை வெளியேறியதால் உள்ளிருந்த பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டனர். இதனையடுத்து சிறியதாமதத்திற்குப்பின்னர் மீண்டும் வழக்கம் போலவிமானச்சேவைகள் நடைபெற்றது. இருப்பினும் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்பகுதியிலேயே தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us