ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லிவரை செல்லக்கூடிய ஆந்திர விரைவு ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட இருபெட்டிகள்மத்தியப் பிரதேசம் குவாலியர் என்னும் இடத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்தது.

Advertisment

fire

இன்று காலை 6.25 மணிக்கு டெல்லியிலிருந்து ஆந்திர புறப்பட்ட ஆந்திர விரைவுரயில்இன்று நண்பகல்மத்திய பிரதேசம் குவாலியரில் பிர்லா நகர் என்னும் இடத்தில்வந்துகொண்டிருந்தபோது ரயிலின் குளிர்சாதன வசதிகொண்ட இரு பெட்டிகள் திடீரென தீப்பிடித்தது.

Advertisment

இதன்காரணமாக உடனே ரயில் நிறுத்தப்பட்டு மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து எரிந்த தீ அருகிலுள்ள பெட்டிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த ரயில் தீப்பிடிப்பு சம்பவம் பற்றிஅறிந்த குவாலியர் பகுதி தீயணைப்பு வீரர்கள்சம்பவ இடத்தை அடைந்து தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முயன்று வருகின்றனர்.

fire

தீவிபத்துபற்றி அறிந்தவுடன் ரயில் நிறுத்தப்பட்டுபயணிகள் உடனே வெளியேற்றப்பட்டதால் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லாமல் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment