fire accident at rajkot corona hospital

Advertisment

கரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 33 கரோனா நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையின் ஐசியூ பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மருத்துவமனையிலிருந்த 28 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டனர். ஆனால், இந்த தீவிபத்தில் சிக்கி ஐந்து நோயாளிகள் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட நோயாளிகளில் சிலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியாத சூழலில், இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.