உத்தரபிரதேசத்தில் அலிகார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மேடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி அலிகாரில் பிரச்சாரத்ஜில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து செல்லும் வயரில் திடீரென தீ ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரின் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக அந்த தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேடை ஏற்பாட்டாளர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.