Advertisment

கொல்கத்தாவில் பயங்கர வெடிவிபத்து... கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு...

fire accident in kolkata

Advertisment

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் கட்டிடங்கள் இடிந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் பெலிகாட்டா பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில், பெலிகாட்டா பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றுபலத்த சேதமடைந்துள்ளது. இந்நிலையில், அங்குவெடித்தது வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் சக்திவாய்ந்த பொருளா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, படுகாயமோ ஏற்படவில்லை என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

kolkata west bengal
இதையும் படியுங்கள்
Subscribe