A fire accident in the Income Tax office at delhi

டெல்லியில் மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு எதிரில் வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வழக்கம் போல், ஊழியர்கள் தங்களது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இந்த அலுவலகத்தின் 4வது மாடியில் இன்று (14-05-24) பிற்பகல் 3 மணி போல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள், கட்டடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இதனைத்தொடர்ந்து, இந்தத்தீ விபத்து சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.