Fire accident in electricity box

புதுச்சேரி நகர பகுதியில் பூமிக்கு அடியில் மின் விநியோகம் செய்ய ஆங்காங்கே நிலத்தடி மூலம் மின் ஒயர்கள் இணைக்கப்பட்டு மின் பெட்டி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காந்தி வீதி அமுத சுரபி அருகேயுள்ள மின் பெட்டியில் திடீரென மின் வயர்கள் தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ அதிகமானதால் அதிக சத்தத்துடன் மின் இணைப்புகள் வெடிக்க தொடங்கியது.

Advertisment

மேலும் புகை அதிகமாக சூழ்ந்ததால் அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மின் பெட்டியில் பற்றிய தீயை அணைத்து பெரும் விபத்தை தவிர்த்தனர். மின்சார பெட்டியில் பற்றிய தீயினால் பல மணி நேரம் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. நகர பகுதியில் உள்ள மின்சாரப் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அச்சமடைந்ததுடன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.