Advertisment

பெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீவிபத்து...

fhggfhgh

Advertisment

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் கடந்த 20-ந் தேதி சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் கடந்த நான்கு நாட்களாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்துகின்றன. இந்நிலையில் இன்று கண்காட்சியின் 4-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அப்போது கார் பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றில் திடீரென தீ ஏற்பட்டது. அந்த தீ அருகிலுள்ள கார்களுக்கு வேகமாக பரவ அங்கிருந்த கார்கள் அடுத்தடுத்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதற்கான காரணம் பற்றி இன்னும் கண்டறியப்படவில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட கார்கள் இதில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Bengaluru Fire accident
இதையும் படியுங்கள்
Subscribe