ராங் ரூட்டில் வந்த அமைச்சருக்கு ஃபைன் - வைரலான டிராபிக் போலிஸ்!

sd

சாலையில் ராங் ரூட்டில் சென்ற மாநில அமைச்சரை தடுத்து நிறுத்தி டிராபிக் போலீஸ் ஒருவர் அபராதம் விதித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பாபுகாட் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழா ஒன்றில் அம்மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி. ராமா ராவ் கலந்துகொண்டார். இதற்காக அவரே கார் ஓட்டிச் சென்றுள்ளார். அமைச்சரின் கார் ராங் ரூட்டில் வருவதைப் பார்த்த போக்குவரத்து காவலர் ஐலய்யா, காரை நிறுத்தி ராங் ரூட்டில் வந்ததற்காக அபராதம் விதித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர், உடனே சுதாரித்துக்கொண்டு அபராதம் செலுத்தினார். மேலும், எந்தவிதத்திலும் நேர்மையில் சமரசம் செய்யாத அந்தக் காவலரை அமைச்சர் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து சால்வை அணிவித்துப் பாராட்டினார். இந்த செய்தி வெளியே தெரிந்ததும் அந்தக் குறிப்பிட்ட காவலரை, பலரும் பாராட்டிவருகிறார்கள். இந்த செய்தி தெலங்கானா மாநில மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

telangana traffic policce
இதையும் படியுங்கள்
Subscribe