Advertisment

கைது செய்யப்பட்ட 12 தூத்துக்குடி மீனவர்களுக்கு 2.27 கோடி ரூபாய் அபராதம்

nn

கடந்த மாதம் 20ஆம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் மாலத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு 2.27 கோடி ரூபாய் அபராதம் விதித்து மாலத்தீவு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தில் 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு மாலத்தீவு அரசிடம்பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீனவர்களை விடுவிப்பதாக மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது. ஆனால் படகுகளையும் மீன்களையும் ஒப்படைக்க முடியாது என தெரிவித்தனர்.

Advertisment

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பிடிபட்ட 12 மீனவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எல்லைக்குள் வந்து மீன்பிடித்தற்காக இரண்டு லட்சம் ரூபாய், வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததற்கு அதற்கு ஒரு லட்சம் என அபராதங்கள் விதிக்கப்பட்டு,மொத்தமாக 2.27 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒருபுறம்இரு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

fisherman Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe