/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vadivelu434.jpg)
காதலருடன் தலைமறைவான தங்களது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு பெண்ணின் இரண்டு கணவர்கள் புகார் அளித்திருப்பது காவல்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த இருவருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு காமெடியில் வருவது போல இந்த பிரச்சனையை பரோசா காவல்நிலையத்தின் காவலர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இரண்டாவது கணவரின் வீட்டை விட்டு, மூன்றாவது காதலருடன் வெளியேறிய பெண், இப்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என்று இரண்டு கணவர்களும் புகாரில் கூறியுள்ளனர்.
முதல் கணவரை காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது சமூக வலைத்தள நண்பர் ஒருவருடன் வசிப்பதாகவும், அந்த பெண்ணின் இரண்டு கணவர்களும் கூறியுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)