Skip to main content

ஜார்கண்டில் 5ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதுவரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. 16 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிட்ட  5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும். மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



5ம் கட்ட தேர்தலில், 40,05,200 வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றவர்கள். தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோட்சா தலைவர் ஹாமந்த் சோரன் போட்டியிடும் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்