காய்கறி கடையில் கிழிந்த 10 ரூபாய் நோட்டை கொடுத்ததால் ஏற்பட்ட சண்டையில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்து வாங்கி பலியாகியுள்ளார்.
மும்பை தாதர் ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள காய்கறி கடையில் முகமது ஹனிப் சித்திக் என்பவர் கடைக்காரரிடம் காய்கறிகளை வாங்கியுள்ளார். அப்போது பழைய 10 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்துள்ளார். இதனால் காய்கறி வியாபாரிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறிய இந்த வாக்குவாதத்தில் கடைக்காரர் தனது கையிலிருந்த கத்தியால் முகமது ஹனிப்பை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.