ரயில்வே துறையில் நிரப்பப்பட உள்ள 9000 பணிகளில் 50 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே போலீசில் கான்ஸ்டபிள் மற்றும் துணை ஆய்வாளர் பொறுப்புகளுக்கு 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு, இந்த இடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.