ADVERTISEMENT

ஜம்மு&காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தில் கலவரம்!

10:13 AM May 06, 2019 | santhoshb@nakk…

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது . இதில் ஏற்கெனவே நான்கு கட்டத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் இன்று ஏழு மாநிலங்களில் சுமார் 51 மக்களவை தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்டத்தேர்தல் நடைபெற்று வருகிறது . அதில் மேற்கு வங்க மாநிலத்தில் 7 மக்களவை தொகுதிகளுக்கும் , ஜம்மூ & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் , புல்வாமா , ஷோபியான் , அனந்த்நாக் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் மேற்கு வங்கம் , காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் ஒரு வாக்குச்சாவடியில் கையெறி வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகல்வகள் தெரிவிக்கின்றனர் . இருப்பினும் மற்ற மாநிலங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது .ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்தலில் ஒற்றை இலக்க வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் , இன்று அந்த மாநிலத்தில் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளதால் வாக்குப்பதிவு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது .இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்கம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT