Advertisment

ஆம் ஆத்மி - ராகுல் காந்தி இடையே கடும் மோதல்; அனல் பறக்கும் டெல்லி தேர்தல் களம்

A fierce clash between Aam Aadmi Party and Rahul Gandhi in Delhi election field

Advertisment

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் நடைபெறும் தேர்தலில் வெற்றி வெற்றிப் பெறுவதற்காக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினா. அவர் பேசியதாவது, “டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தூய்மையான அரசியலை கொண்டு வர வேண்டும் என்று பேசினார். ஆனால், அவரது ஆட்சியில் தான் மிகப் பெரிய ஊழலான மதுபான ஊழல் நடந்தது. ஏழை பங்காளன் என்று கூறிய அவர் தான் கண்ணாடி மாளிகையில் வசித்து வந்தார். பட்பர்கஞ்ச் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக இருந்த மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுபான ஊழலை உருவாக்கியவர். அவர் இங்கு நிறைய ஊழல் செய்தார். பயந்து இந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் புகைப்படங்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் ஒரு அரண்மனையில் வசிக்கிறார். இங்கே கலவரங்கள் நடந்தபோது கூட அவர் அங்கு இல்லை. நாட்டில் உள்ள மற்ற கட்சிகள், பா.ஜ.கவுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் , கெஜ்ரிவால் அவருக்கு பயப்படுகிறார்” என்று கூறினார்.

ராகுல் காந்தியிம் விமர்சனத்துக்கு பதிலளித்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் பிரியங்கா கக்கார், “குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லாத போதிலும், பிரதமர் நரேந்திர மோடி ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டத் தலைமையை போலி மதுபான வழக்கிற்காக சிறையில் அடைத்தார். மறுபுறம், காங்கிரஸ் குடும்பத்திற்கு எதிராக நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் திறந்த மற்றும் மூடிய வழக்கு உள்ளது. அந்த வழக்கில் ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை? ராபர்ட் வதேராவுக்கு பாஜகவிடமிருந்து எப்படி ஒரு சுத்தமான சிட் கிடைத்தது? யார் கோழை, யார் துணிச்சலானவர் என்பது மக்களுக்குத் தெரியும். பாஜகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் மக்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe