
இந்தியாவில் கரோனாபாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ராமாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்குஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில்நாளை (17.03.2021) முதல்,31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இரவு 1௦ மணிமுதல் காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்திலும்கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஏற்கனவே, மத்திய பிரதேச முதல்வர்,மக்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரித்திருந்தார். இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலிலும், இந்தூரிலும்நாளை முதல் மறுஉத்தரவு வரும்வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் இந்தூர், மத்திய பிரதேசத்திலேயேஅதிக மக்கள் தொகை கொண்ட ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குவாலியர் உள்ளிட்ட 8 நகரங்களில் இரவு 10 மணிக்கு மேல் மார்கெட்டுகள் திறந்திருக்கக் கூடாது எனவும் மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)